இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார் - நடிகை ரெஜினா

அவருடன் பணியாற்றும் கலைஞர்களை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்துகொள்வார் என்று ரெஜினா கூறியுள்ளார்.
இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார் - நடிகை ரெஜினா
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் இறுதியாக, விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, மூக்குத்தி அம்மன் - 2, செக்சன் 108 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ரெஜினா நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது, அஜித் சாருடன் நடிக்கப் போகும்போது அவரிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என எனக்குத் தெரியவில்லை. அவருடன் பணியாற்றும் கலைஞர்களை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்துகொள்வார், குறிப்பாக பெண்களுக்கு. ஒரு பெண்ணாக இந்த துறையில் எனக்கு அது நல்ல உணர்வைக் கொடுத்தது.

Also Read
'கர' படம்: மமிதா பைஜுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார் - நடிகை ரெஜினா

அஜித் சார் அவராக வந்து, `நேற்று எல்லோருக்கும் மட்டன் செய்து கொடுத்தேன், இன்று மதிய உணவு உங்களுக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டார். இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார், அவராக வந்து உங்களிடம் பேசி சகஜமாக்குவார். அப்படியான உச்ச நடிகர் அதைச் செய்வது சாதாரண விஷயமில்லை. என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Also Read
"விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தப்படவில்லை'' - சமுத்திரக்கனி
இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார் - நடிகை ரெஜினா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com