ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான அஜித்

அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கிரெவென்டிக் 24எச் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான அஜித்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார்

கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். அந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 2728 க்ரெவென்டிக் 24H, செப்டம்பர் 30 அக்டோபர் 1 LMP3 சோதனை, அக்டோபர் 6 மஹிந்திரா பார்முலா E சோதனை, அக்டோபர் 1112 GT4 ஐரோப்பிய தொடர், என நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார்.

அதனை தொடர்ந்து ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவித்துள்ளது. அதாவது, அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் கிரெவென்டிக் 24எச் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார். கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com