ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் 2வது இடம் பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி

அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் 2வது இடம் பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி
Published on

ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித் அணி, ஜிடி3 ஏஎம் பிரிவில் 2ம் பிடித்து சாதித்துள்ளது.

சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

அஜித்குமாரின் ரேஸர் அணி

நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் ரேஸர் அணி, உலக அளவில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. அண்மையில் லண்டனில் முதல்வர் விஜய் துவங்கி வைத்த பந்தயத்தில் கலந்து கொண்ட பிறகு, தற்போது, ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த 24 மணிநேர கார் பந்தயத்தில் பங்கேற்றது.

GT3 Pro-AM பிரிவில் அஜித்குமாரின் ரேஸிங் அணியினர் ஓட்டிய கார் சீறிப்பாய்ந்து வந்து 2ம் இடத்தை அசத்தியது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 5வது இடமும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3வது இடத்தையும் பிடித்தது.

2ம் இடம் பிடித்த வெற்றியை, கையில் தேசியக்கொடியை ஏந்தி அஜித் குமார் கொண்டாடினார். மேலும், போடியத்தில் தனது குழுவினருடன் கோப்பையையும் பெற்று உற்சாகமாக கொண்டாடினார். வெற்றி கோப்பையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com