

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியுள்ளார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேசிங் அணி 9வது இடத்தை பிடித்து அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து அஜித்குமார் ரேசிங் அணி ஸ்பெயில் நடைபெற்ற உள்ள லீ மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.அந்த போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 8, 10, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றவுள்ள போட்டிகளில் இந்த அணி பங்கேற்க உள்ளது.
இந்த போட்டியை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெறும் பல சர்வதேச போட்டிகளிலும் அஜித்குமார் தொடர்ந்து பங்கேற்க உள்ளது.