ரீ-ரிலீஸ் டிக்கெட் முன்பதிவில் அசத்தும் அஜித்தின் “மங்காத்தா”

அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் நாளை ரீ- ரிலீஸாகிறது.
ரீ-ரிலீஸ் டிக்கெட் முன்பதிவில் அசத்தும் அஜித்தின் “மங்காத்தா”
Published on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா.அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக மங்காத்தா அமைந்து இருந்தது.

இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா. இத்திரைப்படம் வரும் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி வைரலானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மங்காத்தா ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மங்காத்தா படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, திரையரங்குகளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை ரூ.1.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, சென்னை திரையரங்கில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. இதனால், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் வசூலைக் குவித்தது போல், மங்காத்தா திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com