அகில் அக்கினேனியின் ''லெனின்'' - ஸ்ரீலீலாவுக்கு பதில் பாக்யஸ்ரீ போர்ஸ்?


Akhil Akkineni Lenin - Bhagyashree Borses replaces Sreeleela?
x
தினத்தந்தி 28 Jun 2025 11:45 AM IST (Updated: 28 Jun 2025 11:45 AM IST)
t-max-icont-min-icon

''லெனின்'' படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.

கிஷோர் அப்புரு இயக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி, கால் சீட்டில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, புதிய கதாநாயகியை படக்குழு தேடியநிலையில், பாக்யஸ்ரீ போர்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story