

பிரான்ஸ்,
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.
ஆலியா பட், தனது வசீகரமான தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்திருந்த நிலையில், புன்னகையுடன் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.