

சென்னை,
மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். தற்போது அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான்சிட்டி’ நடித்திருக்கிறார். இதில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கவனத்தை ஈர்த்தது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், ‘கான்சிட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.