விஜய் மில்டன் இயக்கத்தில் இணைந்த அம்மு அபிராமி


விஜய் மில்டன் இயக்கத்தில் இணைந்த அம்மு அபிராமி
x
தினத்தந்தி 15 Jun 2025 4:13 PM IST (Updated: 15 Jun 2025 5:15 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் விஜய் மில்டன் தற்போது தெலுங்கு நடிகரான ராஜ் தருணை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார்.

சென்னை,

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் கடைசியாக 'மழை பிடிக்காத மனிதன்' படம் வெளியானது. விஜய் ஆண்டனி நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் தற்போது தெலுங்கு நடிகரான ராஜ் தருணை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார். அதனை தொடர்ந்து நடிகர் பரத், ஆரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை அம்மு அபிராமி இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதில் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, நடிகை அம்மு அபிராமி கோலி சோடா வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story