ஆந்திர வெள்ள பாதிப்பு - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்

நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி உதவி வழங்கினார்.
ஆந்திர வெள்ள பாதிப்பு - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்
Published on

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்தது.

கொட்டி தீர்த்த கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதற்காக பல மாநில திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ஆந்திரா முதலமைச்சர் வெள்ள நிவாரணம் நிதிக்கு பணம் கொடுத்து உதவினர். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி கொடுத்தார். நடிகர் ராம் சரண் சார்பில் ரூ.1 கோடி நிவாரணத்திற்கு வழங்கினார் சிரஞ்சீவி.

இதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " சிரஞ்சீவி அவர்கள் எப்போதும் மனிதநேயம் மிக்க செயல்களில் அதிகம் ஈடுபடுபவர். நீங்கள் கொடுத்த நிதியுதவிக்கு மிக்க நன்றி. இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என கூறியுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com