'துரந்தர் 2' பிரசாரப் படம்... சகோதரி கடும் விமர்சனம் - அனீத் படாவின் திரைப்பயணத்திற்கு ஆபத்தா?

'துரந்தர் 2' பற்றிய ரீட் படாவின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
'துரந்தர் 2'  பிரசாரப் படம்... சகோதரி கடும் விமர்சனம் - அனீத் படாவின் திரைப்பயணத்திற்கு ஆபத்தா?
Published on

மும்பை,

'சையாரா' பட நடிகை அனீத் படா வின் சகோதரி ரீட் படா, 'துரந்தர் 2' திரைப்படத்தை "பிரசாரப் படம்" (Propaganda film) என்று கூறியதால் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்.

ரீட் படா இன்ஸ்டாகிராமில், 'துரந்தர் 2', 'தி கேரளா ஸ்டோரி' மற்றும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' போன்ற படங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக உண்மைகளை மறைத்து மிகப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ரீட் படாவின் இந்தக் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் ரீட் படா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்டுஇன் கணக்குகளை நீக்கியுள்ளார்.

Also Read
2வது குழந்தைக்கு தாயான நடிகை சோனம் கபூர்… குவியும் வாழ்த்து
'துரந்தர் 2'  பிரசாரப் படம்... சகோதரி கடும் விமர்சனம் - அனீத் படாவின் திரைப்பயணத்திற்கு ஆபத்தா?

சகோதரியின் கருத்தால் நடிகை அனீத் படாவும் இணையத்தில் கடுமையான டிரோல்களுக்கு உள்ளாகி வருகிறார். அனீத் படாவின் திரையுலகப் பயணத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com