ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் - ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக்


ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் - ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக்
x
தினத்தந்தி 30 March 2025 5:10 PM IST (Updated: 30 March 2025 6:05 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி உள்ளது.

படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டன. அதாவது பைரஸி என்ற இணைய தளத்தில் முழு படமும் எச்.டி வடிவில் லீக் ஆகி இருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இதை ஊக்குவிக்க வேண்டாம் என சினிமா துறையினர் பலரும் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சிக்கந்தர் படம் இணையத்தில் லீக் ஆனதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஆதங்கத்தை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பல கோடிகள் போட்டு படம் பண்ணி திருடர்கள் கையில் கொடுப்பது எவ்வளவு கேவலம்?" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story