தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்


தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 14 April 2025 10:33 AM IST (Updated: 14 April 2025 11:46 AM IST)
t-max-icont-min-icon

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழியின் மீது அதிக பற்று கொண்டவர்.

சென்னை,

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இவர் தமிழ் மொழியின் மீது அதிக பற்று கொண்டவர். இவர் இசையமைத்த 'செம்மொழியான தமிழ் மொழி' என்ற ஆல்பம் பலரால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஏ.ஆர்.ஆர் (ARR) இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டிடமாக வரக்கூடும் எனவும் ஏ.ஆர்.ரகுமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story