“அரசன்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அப்டேட்

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
“அரசன்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அப்டேட்
Published on

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது.

இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com