இரவு பகலாக நடைபெறும் ‘அரசன்’ ஷூட்டிங்.. லேட்டஸ்ட் அப்டேட்

‘அரசன்’ திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரவு பகலாக நடைபெறும் ‘அரசன்’ ஷூட்டிங்.. லேட்டஸ்ட் அப்டேட்
Published on

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கலைபுலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இதையடுத்து, ‘அரசன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்ற 14 நாட்கள் படப்பிடிப்பும், சென்னையில் நடைபெற்ற 40 நாட்கள் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் இரவு நேரக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய படப்பிடிப்பு கட்டத்தில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றுள்ளார். அடுத்ததாக ஆண்ட்ரியா, அமீர் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் இருவரும் ‘அரசன்’ திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வருவதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதற்காக படக்குழு இரவு பகலாக உழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com