‘அரிகொம்பன்’ புரொமோஷன் டூர் தொடக்கம்... யானையுடன் செல்பி எடுத்தால் பரிசுகள்

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்த 'அரிகொம்பன்' படம் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரிகொம்பன்’ புரொமோஷன் டூர் தொடக்கம்... யானையுடன் செல்பி எடுத்தால் பரிசுகள்
Published on: 

அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புரொமோஷன் டூரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’. மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், காட்டுப் பின்னணியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள படம்

இப்படத்தில் மிதுன் மகேஸ்வரனுக்கு ஜோடியாக சஜிஷ்ணா சேவியர் நடித்துள்ளார். மேலும், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காட்டுப் பின்னணியையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதையையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

டிசம்பர் 11-ல் திரைக்கு வருகிறது

‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காட்டுப் பகுதிகள், விறுவிறுப்பான காட்சிகள் என இடம்பெற்றுள்ள டீசர், படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, படத்தின் விளம்பரப் பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யானையுடன் செல்பி எடுத்தால் பரிசுகள்!

இந்த நிலையில், ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புரொமோஷன் டூரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், ‘அரிகொம்பன்’ யானையின் மாதிரி உருவம் இடம்பெற்றுள்ள வாகனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்திக்க உள்ளது. மேலும், இந்த யானையின் மாதிரி உருவத்துடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டு, அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்யலாம். இவ்வாறு பங்கேற்கும் ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திரைப்பட விளம்பரத்துடன் ரசிகர்களுக்கும் பரிசுகளை வழங்கும் இந்த வித்தியாசமான முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.

X