அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

ஹரிஷ் துரைராஜ் இயக்கும் ‘கான்சிட்டி’ படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்
Published on

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி, பாம் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘கான்சிட்டி’ படத்தின் டைட்டில் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே காணப்படுகிறது. டீசரை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “கான் சிட்டி” படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com