அர்ஜுன் தாசுடன் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன் - சஞ்சனா நடராஜன்

போலீஸ் அதிகாரியாக நடிப்பது சவாலானது என்றாலும், விரும்பி நடித்தேன் என்று சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார்.
சஞ்சனா நடராஜன்
கோப்புப்படம்
Published on: 

பிரசாத் தேவினேனி, சோபு எர்லகடா தயாரித்து மதுமிதா இயக்கியுள்ள புதிய படம். 'ஜான் டோ'. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சிருஷ்டி, ஜாரா வினீத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையில் நடந்த பட விழாவில் நடிகை சஞ்சனா நடராஜன் பேசும்போது, "ஒரு நடிகையாக, நல்ல படக்குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. அர்ஜுன் தாசுடன் இணைந்து 2-வது முறையாக நடித்திருக்கிறேன். போலீஸ் அதிகாரியாக நடிப்பது சவாலானது என்றாலும், விரும்பி நடித்தேன். மீண்டும் அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.

தினமும் படப்பிடிப்பு செல்லும்போதெல்லாம் ஒரு எதிர்பார்ப்புடனேயே செல்வேன். இதுவரை என் அனுபவத்தில், என்னுடைய முழு திறமையையும் இந்த படத்தில் கொட்டியுள்ளேன். இந்த படப்பிடிப்பில் நிறைய பெண்கள் இருந்தார்கள். அர்ஜூன் தாஸ் தான் பாவம். அவரை எல்லாருமே கலாய்த்து விட்டோம்.

இது ஒரு சென்டிமெண்ட் நிறைய உள்ள சைக்காலஜி திரில்லர் படம். இது என் திரையுலகில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

X