விமர்சித்தால் 3 மணி நேரத்தில் கைது; விளம்பர அரசியல் செய்யும் விஜய் அரசு - திவ்யா சத்யராஜ்

சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே விஜய் அரசு வேகம் காட்டி வருவதாக திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
விமர்சித்தால் 3 மணி நேரத்தில் கைது; விளம்பர அரசியல் செய்யும் விஜய் அரசு - திவ்யா சத்யராஜ்
Published on

தமிழகத்தில் தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறையின் மின்னல் வேக நடவடிக்கைகள் குறித்து அதிரடி கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

திவ்யா சத்யராஜ், “தற்போது தமிழ்நாட்டில் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கென்றே ஒரு தனிப்படை செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தற்போதைய முதலமைச்சர் சாருக்கு என்று ஒரு தனி அடியாள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. அவர் ஒரு மாபியா கம்பெனி நடத்துகிறார். பெரிய கனவோடு சினிமாவில் நடிக்க வருபவர்களை சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என கூறி பெண் வாழ்க்கையை அழித்து உள்ளார்.

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டி வருகிறது. மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் அரசுக்கு வேண்டும்; அதை விடுத்து அதிகார பலத்தை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்தக் கூடாது. இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் தங்களின் கட்சி அஞ்சாது என்றும், மக்களின் உண்மையான உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com