அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள 'ரெண்டகம்' படத்தின் அப்டேட்.!

அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்துள்ள 'ரெண்டகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள 'ரெண்டகம்' படத்தின் அப்டேட்.!
Published on

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 'ரெண்டகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com