அசோக் செல்வன் நடித்துள்ள 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!

கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அசோக் செல்வன் நடித்துள்ள 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
Published on

சென்னை, 

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். சமீபத்தில் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com