'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் உரிமையை வாங்கிய அமேசான்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியான 'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் உரிமையை வாங்கிய அமேசான்
Published on

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக உள்ளார். இவர் 'கோச்சடையான்', 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் தொடரை இவர் தயாரித்துள்ளார். நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் பிரைம் வீடியோ மார்ச் 20-ம் தேதி மும்பையில் "ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்" என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

2024 ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர் பார்க்கப்படும் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "கேங்க்ஸ் குருதி புனல்" என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இக்கதை 70 காலக்கட்டத்தில் நடக்கும் நாடகமாகும், ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் ரத்தப் போராட்டமாக இக்கதைக்களம் அமைந்துள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ்சில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். நோவா இக்கதையை இயக்கியுள்ளார். இக்கதையை நோவாவுடன் சேர்ந்து தமிழ் பிரபா மற்றும் பிரபு காளிதாஸ் எழுதியுள்ளனர். கேங்க்ஸ் குருதி புனல் வெப்சீரிசின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com