25வது நாளை கடந்த அசோக் செல்வனின் “அன்பில் அவன்”

கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
25வது நாளை கடந்த  அசோக் செல்வனின் “அன்பில் அவன்”
Published on: 

‘அன்பில் அவன்’ படம் தற்போது 25வது நாளை கடந்துள்ள நிலையில் படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார்.

அசோக் செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’ படம் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அன்பில் அவன்’ படம் தற்போது 25வது நாளை கடந்துள்ளது. அசோக் செல்வனின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘அன்பில் அவன்’ படம் பதிவு செய்துள்ளது. படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com