

‘அன்பில் அவன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ பாடலை மதராஷே வரிகளில் சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர்.
தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். ‘நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை, போர் தொழில்’ உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘தக் லைப்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ‘சபாநாயகன், ப்ளூ ஸ்டார், பொன் ஒன்று கண்டேன்’ கடைசியாக ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அசோக் செல்வனின் 23-வது படத்தின் பூஜை நடைபெற்றது.
அசோக் செல்வனின் அடுத்த படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் பிரீத்தி முகுந்தனின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘அன்பில் அவன்’ படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது.
‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். பீட்டர் ஹெயின் சண்டைப் பயிற்சியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமான்ஸ் மற்றும் அதிரடி ஆக்சனில் உருவாகியுள்ளது. இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும்.
இந்நிலையில் ‘அன்பில் அவன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘ஆசை வரமே’ பாடலை மதராஷே வரிகளில் சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர்.