ரீ-ரிலீஸாகும் அசோக் செல்வனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்”

விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன், மணிகண்டன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரும் 19ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
ரீ-ரிலீஸாகும் அசோக் செல்வனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்”
Published on

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய, சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம், கடந்த 2022 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், ரித்விகா, அபி ஹசன், அஞ்சு குரியன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஏ. ஆர். என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்தை, பிவிஆர் சினிமாஸ் நிறுவனம், வரும் செப்டம்பர் 19 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com