நடிகர் மகேஷ் பாபுவிற்கு அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை

டிராகன் பட வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் மகேஷ் பாபுவிற்கு அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை
Published on

ஐதராபாத்,

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21-ந் தேதி வெளியான படம் 'டிராகன்'. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இப்படம் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் டிராகன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது, "ஓ மை கடவுளே' படம் வெளியானபோது அந்த படத்தை பார்த்து விட்டு, நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள், உடனடியாக படத்தை பார்த்து கொண்டாடத் தொடங்கினார்கள். அதேபோல, 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என காத்திருக்கிறேன். நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com