சட்டசபை தேர்தலில் வெற்றி: த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சமந்தா

வரலாற்றை மாற்றி எழுத இதைவிட ஒரு மகத்தான வழி இருக்க முடியாது என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி: த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சமந்தா
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இரவு 9 மணி நிலவரப்படி தவெக - 107, திமுக - 60, அதிமுக 47 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் பெரும்பான்மை தேவை. முதல் தேர்தலிலேயே தவெக மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் 1,12,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 73,044 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், “களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வரலாற்றை மாற்றி எழுத இதைவிட ஒரு மகத்தான வழி இருக்க முடியாது. விஜய் சார், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது எனக்கு எப்போதோ தெரியும். இது எப்போதுமே உங்கள் கனவாக இருந்தது. நீங்கள் இப்படியாகத்தான் ஆக வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. அது நீங்கள் என்பதில் மிக்க பெருமை” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com