ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் பாலையா

'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பாலையாவை வைத்து படம் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் பாலையா
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தை பார்த்த நடிகர் பாலையாவிற்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம். அதனை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை நேரில் அழைத்து அவரது இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளராம். அவருக்கு அந்த ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததால் விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படம் ஒன்று தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com