பாலையாவின் “அகண்டா 2” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் பல மொழிகளில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. 

போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாலையா நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், இசையமைப்பாளர் தமன் படத்தின் இசைப்பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் அகண்டா 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com