“பல்டி” படத்தின் டிரெய்லர் அப்டேட்

ஷேன் நிகாம், சாந்தனு பாக்கியராஜ் நடித்துள்ள ‘பல்டி’ படம் வரும் 26 ம் தேதி வெளியாகிறது.
“பல்டி” படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஷேன் நிகாம் தன் 25-வது படமான பல்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 26 ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாடலான ஜாலக்காரி வீடியோ பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை விநாயக் சசிகுமார் வரிகளில் சாய் அபயங்கர் மற்றும் சுபலாஷினி இணைந்து பாடியுள்ளனர். பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்டி  படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com