திருமணத்திற்கு முன் ஜோடியாக இதனை செய்யுங்கள்... கவர்ச்சி நடிகை அதிரடி அறிவுரை

என்னுடைய இரு மகன்களுக்கும், இந்த அறிவுரையையே நான் எப்போதும் வழங்கி வருகிறேன் என்றும் ஜீனத் அமன் தெரிவித்து உள்ளார்.
திருமணத்திற்கு முன் ஜோடியாக இதனை செய்யுங்கள்... கவர்ச்சி நடிகை அதிரடி அறிவுரை
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் ஜீனத் அமன். திருமணம் பற்றி ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் சில தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகையான 72 வயது கொண்ட ஜீனத் அமன், லிவ்-இன் முறையில் வாழ்வதே உச்சபட்ச பரிசோதனையாக இருக்கும் என அதில் விவரித்து இருக்கிறார். அந்த பதிவில், நீங்கள் ஓர் உறவில் இருக்கிறீர்கள் என்றால், திருமணம் செய்வதற்கு முன் ஒன்றாக வாழ்ந்து பாருங்கள் என நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்.

இந்த அறிவுரையையே நான், என்னுடைய இரு மகன்களுக்கும் எப்போதும் வழங்கி வருகிறேன். அவர்கள் இருவரும், ஜோடிகளுடன் லிவ்-இன் உறவுமுறையில் இருந்தனர். அல்லது... இருக்கின்றனர். எனக்கு தர்க்கரீதியாக இது சரியாக தெரிகிறது. இரண்டு பேர் ஒரு குடும்பத்தினராக ஆவதற்கு முன், அவர்கள் இருவரும் முதலில், தங்களுடைய உறவை உச்சபட்ச பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒரு நாளில் சில மணிநேரம் நீங்கள் நன்றாக தென்படலாம். ஆனால், இருவரும் ஒரு குளியல் அறையை ஒன்றாக பகிர முடியுமா? மனஅழுத்தம் ஏற்படும்போது? ஒவ்வொரு நாள் இரவும் என்ன உணவு சாப்பிட வேண்டும் என ஒத்து போகும்போது? படுக்கையறையில் ஒன்றாக இருக்கும்போது? என எப்போதும் சரியாக இருக்க முடியுமா? என்று பரிசோதனை செய்து பார்த்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

இரண்டு பேர் நெருங்கி இருக்கும்போது, அவர்களுக்கு இடையே எதிர்பாராத கோடிக்கணக்கான சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். அதில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள்? என்பது முக்கியம். நீங்கள் இருவரும் ஒத்து போகிறீர்களா? என்பதே இதில் முக்கிய விசயம்.

லிவிங்-இன் ஆக வாழ்வது பாவம் என்ற அளவில் இந்திய சமூகம் பார்க்கிறது என்பது பற்றி நான் நன்றாக அறிவேன். ஆனால், பல விசயங்களில் சமூகம் இறுக்கத்துடனேயே இருக்கிறது. மக்கள் என்ன கூறி விட போகிறார்கள்? என அந்த பதிவை முடித்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு பின், மணீஷ் மல்கோத்ராவின் தயாரிப்பில், பன் டிக்கி திரைப்படத்தில் அமன் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com