

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் 9 வது இடத்தை பிடித்தனர். அதனை தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற 24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம் (24H Series GT3 Pro -AM) என்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் அணி 2ம் இடம்பிடித்து அசத்தி உள்ளது. இதையடுத்து இந்திய தேசியக்கொடி மற்றும் வெற்றிக் கோப்பையை உயர்த்தி காண்பித்து அஜித் குமார் தனது அணியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த சாதனை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் அஜித்குமார் அணி சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.