பரத்தின் “காளிதாஸ் 2” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அஜய் கார்த்தி நடிக்கும் “காளிதாஸ் 2” படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.
பரத்தின் “காளிதாஸ் 2” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
Published on

‘பாய்ஸ்’ படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தற்போது, ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடித்துள்ளார். ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார். ‘காளிதாஸ் 2’ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்தநிலையில், தணிக்கை வாரியம் ‘காளிதாஸ் 2’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல்3ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com