சினிமாவில் இருந்து விலகி ரூ.1,200 கோடிக்கு அதிபரான பாலிவுட் நடிகை


சினிமாவில் இருந்து விலகி ரூ.1,200 கோடிக்கு அதிபரான பாலிவுட் நடிகை
x

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்து பெரும் கோடீஸ்வரர்களாக ஆன நடிகைகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

திரை உலகில் நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் சினிமா நடிப்பு மட்டும் இன்றி தொழில் அதிபர்களாகவும் மாறி வருகிறார்கள். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்து பெரும் கோடீஸ்வரர்களாக ஆன நடிகைகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கத்ரீனா கைப் முதல் கிருத்தி சனோன் வரை இந்த பட்டியலுக்குள் வந்துள்ளனர். அந்த வகையில் பாலிவுட் திரை உலகிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் ஆஷ்கா கோரடியா.

2000-ம் ஆண்டில் நடிக்க தொடங்கிய ஆஷ்கா 2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பை விட்டு வெளியேற முடிவு செய்தார். நடிப்பில் இருந்து விலகி அழகு சாதன பிராண்டை ரூ.50 லட்சம் முதலீட்டில் தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த பிராண்ட் ஆன்லைனில் மட்டுமே விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.100 கோடி வருவாயை பெற்று தந்தது. படிப்படியாக இவரது தொழில் வாழ்க்கை உச்சத்தை அடைந்து ஆஷ்காவின் சொத்து மதிப்பு தற்போது ரூ.1200 கோடியை எட்டியுள்ளது.

1 More update

Next Story