ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப்-ல் மிரட்டல்...பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப்-ல் மிரட்டல்...பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

மும்பை,

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரன்வீர் சிங் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் செய்தி வந்த தொலைபேசி எண்ணைத் தேடி (trace) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read
மீண்டும் ‘டியூட்’ பட கூட்டணி.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜு?
ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப்-ல் மிரட்டல்...பாதுகாப்பு அதிகரிப்பு

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரன்வீர் சிங்கின் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாவலர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com