பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் - மணிப்பூரின் 'பூங்' சாதனை

பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையை 'பூங்' பெற்றுள்ளது.
பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் -  மணிப்பூரின்  'பூங்' சாதனை
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்ற பாப்டா விருது வழங்கும் (BAFTA) விழாவில், ‘சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்’ பிரிவில் மணிப்பூரின் 'பூங்' (Boong) திரைப்படம் விருது வென்று வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையை 'பூங்' பெற்றுள்ளது.

“இந்த விருதை என் தாய் மண்ணான மணிப்பூருக்கு சமர்ப்பிக்கிறேன். மிகுந்த சிக்கலில், புறக்கணிக்கப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் கிடைக்காத பகுதியாக மணிப்பூர் தற்போது உள்ளது. இந்த விருது அங்குள்ள மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளியாக இருக்கும்” என்றார்.

Also Read
ஒரே தேதி…இரு படங்கள்...சரத்குமாருடன் மோதும் ராதிகா - எகிரும் எதிர்பார்ப்பு
பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் -  மணிப்பூரின்  'பூங்' சாதனை

'பூங்' திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான கதை. சமூகச் சூழல், அடையாளம் மற்றும் மனித உறவுகளை நுட்பமாக பதிவு செய்துள்ள இந்த படம், சர்வதேச அளவில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com