"அண்ணா.. உங்கள் தம்பியாக துணை நிற்பேன்"- ரவிமோகன் விஜய்க்கு ஆதரவு


அண்ணா.. உங்கள் தம்பியாக துணை நிற்பேன்- ரவிமோகன் விஜய்க்கு ஆதரவு
x

அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக சென்சார் சான்றிதழ் (தணிக்கைச் சான்று) வழங்கப்படவில்லை. இந்த படத்தை மறுஆய்வுக் குழு பார்ப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரவிமோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை.. நீங்கள்தான் தொடக்கம். அந்தத் தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் தொடங்கும். நான் விஜய் அண்ணாவுடன் நிற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story