என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் - ஆர்த்தி பரபரப்பு பதிவு

ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் - ஆர்த்தி பரபரப்பு பதிவு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக புகார்களை கூறி வந்த நிலையில், கோர்ட்டின் அறிவுரையை ஏற்று தற்போது அமைதி காக்கிறார்கள்.

மேலும் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி தரப்பு கேட்ட நிலையில், மாதம் ரூ.3 லட்சத்தை ஜீவனாம்சமாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு ஸ்டோரி கவனம் ஈர்த்துள்ளது. அதில், 'சூர்யா, அஜித், விக்ரம், கமல், இவங்க எல்லாரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்' என பதிவிட்டுள்ளார்.

ரவி மோகன் தற்போது யோகிபாபு நடிப்பில் 'ஆன் ஆர்டினரி மேன்' என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ரவி மோகனின் தோழி கெனிஷா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com