துணை நடிகையிடம் ரூ. 71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இயக்குனர் மீது வழக்குப்பதிவு

இயக்குனர் கவால் சர்மா மீது துணை நடிகை கிரண் அகுஜா மோசடி புகார் அறித்துள்ளார்.
துணை நடிகையிடம் ரூ. 71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இயக்குனர் மீது வழக்குப்பதிவு
Published on

மும்பை,

மும்பை கார் பகுதியை சேர்ந்தவர் துணை கிரண் அகுஜா. இவர் ரெடி உள்ளிட்ட இந்தி படங்கள், விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஆசிரியையாகவும் பணியாற்றியவர். இவா கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர் கவால் சர்மாவை சந்தித்தார். அப்போது அவர் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நடிகையிடம் கூறினார்.

இதையடுத்து அவர் இயக்குனரிடம் 2024 ஏப்ரல் முதல் 2025 ஏப்ரல் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ. 71 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னது போல வெப் சீரிஸ் தயாரித்து நடிகைக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த மோசடி குறித்து நடிகை கார் போலீசில் புகார் அளித்தார். இந்தப்புகார் குறித்து போலீசார், இயக்குனர் கவால் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குனர் கவால் சர்மா, பாப் கி கமினே, நமக், ஜிதே ஹைக் சான் சே உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com