

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மற்றும் வெளியீட்டு பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது.
ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.