

சென்னை
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் நேற்றி இரவு சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசின் வீட்டின் கதவை நள்ளிரவு போலீசார் நீண்ட நேரம் தட்டியதாகவும் அவர் இல்லை என்றதும் திரும்பி சென்று விட்டதாகவும். அவர தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். போலீசார் இதனை வழக்கமான ரோந்துபணிதான் என குறிப்பிட்டனர் .
இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 27 ந்தேதிவரை ஏ.ஆர். முருகதாசை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளார்.