சிரஞ்சீவியின் 157வது படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் ரூ.304 கோடி வசூலித்துள்ளது.
சிரஞ்சீவியின் 157வது படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு
Published on

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்த படம் சிரஞ்சீவியின் 157வது படமாகும்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்கு திரைப்படம், ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’. வெங்கடேஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். ரூ.50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.300 கோடியை வசூலித்தது.

இந்தப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், மன சங்கர வர பிரசாந்த் காரு. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர்.

2015-ம் ஆண்டு பட்டாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அனில் ரவிபுடி. இவர் தொடர்ச்சியாக சுப்ரீம், ராஜா தி கிரேட், பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 2, சரிலேரு நீக்கெவரு, பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 3, பகவந்த் கேசரி, சங்கராந்திக்கு வஸ்துன்னாம் என்று 8 படங்களை இயக்கியிருக்கிறார். 9வது படமாக மன சங்கர வர பிரசாந்த் காரு வெளியானது. அனில் ரவிபுடி இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இப்படம் ரூ.304 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் , ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் இன்று 50வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. சிறப்பான கதையம்சம், திரைக்கதை, நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com