செட்டுக்கு தாமதமாக வருவாரா சல்மான் கான் ? - ’கல்வான்’ பட நடிகை பதில்

’கல்வான்’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சல்மான் கான் தற்போது 'கல்வான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாக உள்ளது. அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். சல்மான் கானின் முந்தைய வெளியீடான 'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் இப்படத்தின் மீது உள்ளது.
இதற்கிடையில், சல்மான் கான் 'கல்வான்’ பட செட்டுக்கு தாமதமாக வருவார் என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தநிலையில், அதற்கு நடிகை சித்ராங்தா சிங் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில்,
“அவர் ஒருநாளும் தாமதமாக வந்ததே இல்லை. உதாரணத்திற்கு, ’கல்வான்’ படத்தின் ஒரு முக்கியமான காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். உணர்ச்சிப் பூர்வமான மிக முக்கியமான காட்சி.
அந்த காட்சியில் சன்மான் கான் நடிக்கவில்லை. இருந்தாலும், அவர் அங்கே இருந்தார். அவர் காலை 10:30க்கே வந்துவிடுவார். தனது வேலை மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புக்காக அவர்மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது’ என்றார்.






