முதல் முறையாக சல்மான் கானுக்கு ஜோடியாகும் சித்ராங்தா சிங்?


Chitrangda Singh to star opposite Salman Khan in Apoorva Lakhias next
x

'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது.

மும்பை,

சல்மான் கானும் சித்ராங்தா சிங்கும் முதல் முறையாக அபூர்வா லக்கியா இயக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

சல்மான் கானின் முந்தைய வெளியீடான 'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது.

இந்நிலையில், , சல்மான் கானின் அடுத்த படத்தை 'ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா' மற்றும் 'ஹசீனா பார்க்கர்' போன்ற அதிரடியான படங்களை இயக்கியதற்காக மிகவும் பிரபலமான அபூர்வா லக்கியா இயக்க இருப்பதாகவும் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இது உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிகாரபூர்வமாகும் படசத்தில் சல்மான் கானும் சித்ராங்தா சிங்கும் முதல் முறை இணைந்து நடிக்கும் படமாக இப்படம் இருக்கும்

1 More update

Next Story