மகேஷ்பாபு படத்தில் ஹாலிவுட் நடிகர் ?

நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள அட்வெஞ்சர் படத்தில் நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் உலா வருகின்றன.
மகேஷ்பாபு படத்தில் ஹாலிவுட் நடிகர் ?
Published on

தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ்பாபு படங்களை தமிழ், இந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். பான் இந்தியா படங்களாக மகேஷ்பாபு படங்கள் மாறி உள்ளதால் இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். வெளிநாடுகளிலும் பிரபலமாகி உள்ளார். தமிழில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள புதிய படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்தில் தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் எடுக்கின்றனர். மகேஷ்பாபு, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com