தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்

தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்.
தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கு தமிழ், தெலுங்கு படங்களில்தான் நல்ல பெயர் கிடைத்தது. எல்லா மொழிகாரர்களும் அவர்களின் சொந்த மொழி பெண்ணாகவே என்னை பார்க்கிறார்கள்.

மாதுரி தீட்சித்தை பார்த்துதான் நடிகையாக ஆசைப்பட்டேன். ஒவ்வொரு படத்திலும் புதிது புதிதாக கற்று என்னை மெருக்கேற்றி கொண்டேன். ரசிகர்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி புதுமையாக நடிக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் நடிக்க முடியும்.

மனது வைத்து வேலை செய்தால் அதுவே நம்மை சிகரத்தில் கொண்டு வைக்கும். எனக்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டேன். கவலை ஏற்பட்டால் அழுது விடுவேன். ஓய்வில் கவிதைகள் எழுதுகிறேன். அதை புத்தகமாக வெளியிட யோசிக்கிறேன்.

ஊரடங்கில் உணவு கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறேன். நான் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பேன். ஆனால் கொரோனா எனக்கும் வந்தது. சத்தான உணவாலும், மன திடமாக இருந்தும், அதில் இருந்து மீண்டேன். உணவு, தூய்மை, ஆரோக்கியத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க கொரோனா கற்று கொடுத்தது.''

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com