"இனி சினிமாதான் முக்கியம், உஷார் ஆகிவிட்டேன்" - வாணி போஜன்

எனக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்” என்று தனது சமூக வலைதளங்களில் வாணி போஜன் பதிவிட்டுள்ளார்.
"இனி சினிமாதான் முக்கியம், உஷார் ஆகிவிட்டேன்" - வாணி போஜன்
Published on

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் வாணி போஜனும் ஒருவர். முன்னணி நடிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக 'இவர் காணாமல் போய்விட்டாரோ?' என்று எண்ணும் அளவுக்கு வாணி போஜன் சத்தம் இல்லாமல் இருந்து வந்தார். இரண்டெழுத்து கொண்ட அந்த 'கோவா' நடிகருடன் 'எங்கேயும் எப்போதும்' என வாணி போஜன் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. இதனால் வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை. பட வாய்ப்புகளும் கை மாறிப் போனது.

இதையடுத்து வாணி போஜனுக்கு பலரும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். தனக்கான வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட வாணி போஜன், இனிமேல் சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்துவது என்று முடிவெடுத்துள்ளார். "இனி எனக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்" என்று தனது சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

இப்போதாவது வாணி போஜனுக்கு எதார்த்தம் புரிந்ததே... என்று அவரது ரசிகர்கள் ஆறுதல் பட்டுக்கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com