சினிமா இன்று பெரும் பிரச்சினையில் இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார்

இயக்குநர் எஸ். லதா இயக்கியுள்ள ‘மரகதமலை’ படம் வரும் ஏப்ரல் 3 -ம் தேதி வெளியாகவுள்ளது.
சினிமா இன்று பெரும் பிரச்சினையில் இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார்
Published on

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரகதமலை’. எல்.ஜி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஓர் அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன.ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள ’மரகதமலை’ படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com