‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ – ரிஸ்க் எடுத்து எடுத்த படம் என வீர அன்பரசு பேட்டி

தேர்தலுக்கு மறுநாள் இந்தப்படம் திரைக்கு வருகிறது.
‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ – ரிஸ்க் எடுத்து எடுத்த படம் என வீர அன்பரசு பேட்டி
Published on

ஏ.ஏ.ஏ. பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்து, வீர அன்பரசு கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள புதிய படம், 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. மும்பை அழகி ஏஞ்சல் கதாநாயகியாக நடிக்கிறார். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மது மிதா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், சிவராமன் இசையில் தயாராகும் இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைக்கிறார்.

எல்லையை பாதுகாக்கும் ஒரு கமாண்டோவின் வாழ்வில் வரும் காதலை மையப்படுத்தி தயாராகிய இந்த படத்தின் படப்பிடிப்பு குலு, மணாலி, கோவா, ஜவ்வாது மலை, மகாபலிபுரத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து வீர அன்பரசு கூறும்போது, "ஜவ்வாது மலையில் உள்ள பீமா நீர்வீழ்ச்சிக்கு கீழ் உள்ள பள்ளத்தாக்கில், சுற்றுலா பயணிகளுக்கு கூட அனுமதி இல்லாத இடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். தேர்தலுக்கு மறுநாள் இந்தப்படம் திரைக்கு வருகிறது. இது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும்", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com