மகேஷ் பாபுவை ஜேம்ஸ்பாண்டுடன் ஒப்பிட்ட தமன்


Composer Thaman compares Mahesh Babu to James Bond
x

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

சென்னை,

நட்சத்திர இசையமைப்பாளர் தமன் தமிழில் 'வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' மற்றும் டாகு மகாராஜ் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பவன் கல்யாண் நடிக்கும் "ஓஜி மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நேர்காண்ல் ஒன்றில் பேசிய தமன், நடிகர் மகேஷ் பாபுவை ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்டுடன் ஒப்பிட்டு பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், "நம்ம ஊரில் 'ஜேம்ஸ் பாண்ட்' யார்? மகேஷ் பாபு. அவர் டாக்சிடோ அணிந்து துப்பாக்கி பிடித்தால், படம் எளிதாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும். மகேஷ் பாபு சார் ஒரு கேங்ஸ்டர் படம் பண்ணுங்க' என்றார்.

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' படத்திற்கு தமன்தான் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற குர்ச்சி மடதப்பெட்டி பாடல் மிகப்பெரிய அள்வில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story